இங்கிலீஷ் விங்கிலிஷ் பட நடிகை உயிரிழந்தார்

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 11:29 am

english-vinglish-actor-sujata-kumar-passes-away

ஶ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்த நடிகை சுஜாதா குமார் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். 

2012 ஆண்டு ஶ்ரீதேவி நடிப்பில் இங்கிலீஷ் விங்கிலிஷ் படம் வெளியானது. இந்த படத்தில் நடித்த சுஜாதா குமார் நேற்று இரவு காலமானார். இதுகுறித்து அவரது சகோதரியும் நடிகையுமான சுஜித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் நேற்று இரவு 11.26 மணிக்கு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். 

மரணமடைந்த சுஜாதா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மும்பையில் உள்ள லிலாவாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close