கேரளாவின்  'ரியல் சூப்பர் ஹீரோஸ்' மீனவர்கள் தான்: முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்!

  முத்துமாரி   | Last Modified : 20 Aug, 2018 01:14 pm

superheroes-without-capes-kerala-s-fishermen-are-backbone-of-rescue-efforts

கேரளாவின் உண்மையான ராணுவ வீரர்கள் மீனவர்கள் தான் என கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கேரளாவில் கடந்த 3 வாரங்களாக பெய்த கனமழையால், அம்மாநிலம் முழுவதுமே நிலைகுலைந்துள்ளது. சுமார் 8 லட்சம் மக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழையால் படுவிளைவை சந்தித்துள்ள கேரளாவுக்கு இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. மேலும், மக்களுக்கு தேவையான அத்தியாவச பொருட்களை அண்டை மாநில அரசுகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து வழங்கி வருகின்றனர். 

இதற்கிடையே, வெள்ளம் ஏற்பட்ட தொடக்கம் முதலே தீவிரமாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருபவர்கள் அம்மாநில மீனவர்கள் தான். முதலில் ராணுவப்படை குறைவாகவே இருந்த நிலையில் இவர்கள் தான், மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதும் இவர்களது பணி தொடர்ந்து வருகிறது. கடலோரம் வசிக்கும் அனைத்து மீனவர்களும் நேரம் காலம் பார்க்காமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகினறனர். இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை இவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மீட்புப்பணியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் படகுகளில் ஏறுவதற்காக,  மீனவர் ஒருவர் குனிந்து முதுகை காட்டுவது பார்ப்போரை கண்கலங்க செய்வதாகவே உள்ளது. இதனை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், "கேரள மீட்புப்பணியில் மீனவர்கள் தான் ராணுவத்தை விட அதிகமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மீனவர்கள் இல்லை என்றால் இந்த மீட்பு பணிகளே நடந்து இருக்காது என்று கூறியுள்ளார். மீனவர்கள் தான் கேரளாவில் உண்மையான ராணுவ வீரர்கள்" என்று புகழ்ந்துள்ளார்.

மேலும், மீனவர்களுக்கு தினமும் ரூ.3,000 உதவித்தொகை, படகுகள், எரிபொருள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close