கொச்சியில் இருந்து விமான சேவை தொடங்கியது!

  Newstm Desk   | Last Modified : 20 Aug, 2018 10:29 pm
air-india-flight-land-in-kochi-jet-indigo-goair-begin-special-services-to-kerala

கேரளாவில் பெய்த கனமழையால், கொச்சி விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து இன்று முதல் விமான சேவை தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழையால், பெரும்பாலாக அனைத்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சி விமான நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதனால் கொச்சியில் இருந்து விமான சேவை கடந்த 14ம் தேதி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்னும் நீர் வடியாத நிலையில், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை தொடங்கியுள்ளது. பெங்களூரில் இருந்து ஏர் இந்தியா வர்த்தக விமானம் இன்று கொச்சி கடற்படை தளத்தை வந்தடைந்தது. இதில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். கேரளாவுக்கு அனுப்பப்படும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களுக்கு சரக்கு கட்டணம் கிடையாது எனவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

மேலும், கேரளாவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன. ஜெட் ஏர்வேஸ் விமானம் பெங்களூரு - கொச்சி இடையே சேவையை தொடங்க உள்ளது. நாளை முதல் இந்த விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மும்பை, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கும் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. 

— Jet Airways (@jetairways) August 20, 2018

 

மேலும், கோ ஏர்(Go Air) நிறுவனம் மும்பை - திருவனந்தபுரம் இடையே விமான சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. 

கேரளாவில் மழை குறைந்த நிலையில் விமான போக்குவரத்து சேவை விரைவில் முழுவதுமாக சீராகும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close