வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிஸ்கட்டை தூக்கி எறியும் அமைச்சர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Aug, 2018 08:18 pm

video-of-revanna-throwing-biscuit-packets-goes-viral


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு கர்நாடக அமைக்கர் ரேவன்னா பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கேரளாவை போன்று கர்நாடகாவும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தின் மங்களூரு, குடகு, மைசூரு ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில்மழை ம ற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக வந்த கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் சகோதரருமான ரேவன்னா மக்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close