தனித்தேர்வர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாது!

  Newstm Desk   | Last Modified : 21 Aug, 2018 01:26 pm
private-candidates-can-t-write-plus-2-exam-directly-from-10th-std

10ம் வகுப்பு முடித்த தனித்தேர்வர்கள் இனி நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியாது என அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தில் முன்னதாக 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 11ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. வரும் 2018-19 கல்வியாண்டு முதல் 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தனித்தேர்வர்களுக்கும் இந்த முறை பொருந்தும் என அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்ட தகவலின்படி, "பிளஸ் 1 வகுப்பிற்கு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இனி தனித்தேர்வர்களும் பிளஸ் 1 பொதுத்தேர்வை முடித்துவிட்ட பின்னர் தான் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close