டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வழங்கிய பிரதமர் மோடி, அமித் ஷா!

  முத்துமாரி   | Last Modified : 22 Aug, 2018 12:11 pm
pm-modi-hands-over-the-urns-carrying-ashes-of-vajpayee-to-bjp-presidents

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கினார். 

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ஜ.கவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த ஆகஸ்ட் 16 அன்று உயிரிழந்தார். அதற்கு மறுநாள் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் டெல்லி ஸ்ம்ரிதி ஸ்தல் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இதையடுத்து வாஜ்பாயின் அஸ்தி இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நதிக்கரைகளில் கரைக்கப்படுகிறது. டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்க, பா.ஜ.கவின் 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேசத் தலைவர்களும் அதனை பெற்றுக்கொண்டனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் அஸ்தி கரைக்கப்படவுள்ளது. வாஜ்பாய் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கவும், அங்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close