திருவனந்தபுரத்தில் ஒரு மாதத்திற்குள் புயல் எச்சரிக்கை மையம்: மத்திய அரசு அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 22 Aug, 2018 04:01 pm
kerala-to-get-cyclone-warning-centre-another-doppler-radar

கேரளா திருவனந்தபுரத்தில் ஒரு மாதத்திற்குள் புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கேரளாவில் வரலாறு காணாத மழையால், அம்மாநிலம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், கோடிக்கணக்கான பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கேரள வெள்ளம் இந்திய நாடு முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து, கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, "அண்மைக் காலமாக கேரளா மற்றும் கர்நாடக கடற்பகுதியில் புயல் மற்றும் கடும் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதை கருத்தில் கொண்டு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் திருவனந்தபுரத்தில் புயல் எச்சரிக்கை மையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டு வருகிறது.  அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த மையத்தை அமைக்க அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. தற்போது சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களில் புயல் எச்சரிக்கை மையங்கள் அமைந்துள்ளன. 

கேரள, கர்நாடக மாநிலங்களில் தேவைக்கேற்ப வானிலை எச்சரிக்கை வெளியிடுவதற்கான உபகரணங்கள் மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும். கேரளாவில் தற்போது இயங்கி வரும் இந்திய வானிலைத் துறையின் நடவடிக்கைகளை இந்த மையம் மேலும் வலுப்படுத்தும்" என கூறப்பட்டுள்ளது. 

இதேபோன்று 2019ம் ஆண்டுக்குள்  கர்நாடகா மங்களூரில் ஒரு புயல் எச்சரிக்கை மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close