அதிதி சிங் நியாபகம் இருக்கா? அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்!

  முத்துமாரி   | Last Modified : 23 Aug, 2018 04:09 pm
rahul-gandhi-has-appointed-ms-aditi-singh-as-general-secretary-of-all-india-mahila-congress

உத்தரபிரதேசம் ரபரேலி தொகுதி எம்.எல்.ஏவான அதிதி சிங்கை அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் ரபரேலி மாவட்டம் சதார் என்ற சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங் ஆவார். இவர், காங்கிரஸ் மூத்த தலைவர் அகிலேஷ் சிங்கின் மகள். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அதிதி சிங்கை இணைத்து, திருமணம் நடக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இவர்கள் இருவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிதி சிங் அதனை மறுத்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ராகுல்காந்தி எனது மூத்த சகோதரர் போன்றவர். அவருக்கு நான் சகோதரர் என்ற முறையில் ராக்கி கயிறு எல்லாம் கட்டி இருக்கிறேன். இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த செய்தி என்னை மிகவும் பாதித்துள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிதி சிங்கை அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய மகிளா காங்கிரஸின் தலைவர் அசோக் கெஹலோட் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close