உ.பியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பிரம்மாண்டமாக விஷ்ணு கோயில் காட்டுவோம்: அகிலேஷ் யாதவ் அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 24 Aug, 2018 12:20 pm
up-akhilesh-yadav-promises-to-build-city-named-after-vishnu-and-an-angkor-wat-inspired-temple

உத்தரபிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஷ்ணு பெயரில் நகரம் அமைக்கப்பட்டு, அங்கு பிரம்மாண்டமாக ஒரு கோயில் கட்டப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் இதுகுறித்து உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, 'அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும்' என கூறியிருந்தார். இது மற்ற கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "உ.பியில் நாளையே நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 2000 ஏக்கர் பரப்பளவில் விஷ்ணு பெயரில் ஒரு நகரம் அமைக்கப்பட்டு, அங்கு கம்போடியா அங்கோர் வாட்டில் உள்ள விஷ்ணு கோயிலைப்போல மிகப்பெரிய விஷ்ணு கோயில் அமைக்கப்படும். இதற்காக கட்டிடக்குழு கம்போடியாவிற்கு சென்று ஆய்வு செய்து, அதே கலைநயத்துடன் இங்கு கோயில் அமைக்கப்படும் " என கூறியுள்ளார்.  

பா.ஜ.கவுக்கு போட்டியாக சமாஜ்வாதி கட்சி இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close