மக்களின் ஆசியுடன் மீண்டும் முதல்வராவேன்: சித்தராமையா அதிரடி!

  முத்துமாரி   | Last Modified : 25 Aug, 2018 10:32 am

siddaramaiah-wants-to-be-cm-again

மக்களின் ஆதரவுடன் மீண்டும் கர்நாடகாவின் முதல்வராவேன் என அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பாக நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை பெற்றிருந்தாலும், பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைந்தது. ம.ஜ.த சார்பில் குமாரசாமி முதல்வராக  பொறுப்பேற்றார். குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்று முதல்வர் பதவியை ம.ஜ.த பிடித்துள்ளதால், காங்கிரஸ் வட்டாரம் சற்று வருத்தமாகவே உள்ளது. 

இந்நிலையில்,முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவின் ஹசன் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், "அரசியலில் ஜாதியும், பணமும் கொட்டிக்கிடக்கிறது. நான் இரண்டாவது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் தடுத்தன. எனினும் இத்துடன் முடிவடைவதில்லை. அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான். மக்களின் ஆசியுடன் நான் மீண்டும் முதல்வராவேன்" என்றார். இவரது பேச்சு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close