மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 12:36 pm
mamata-banerjee-wishes-m-k-stalin

தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.கவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் கட்சியின் பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்றார். இதுகுறித்து தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். 

இந்நிலையில் கட்சியின் தலைவராகி இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close