ஜனநாயக சக்திகளின் முதல் வரிசையில் தி.மு.க: ஸ்டாலினை பாராட்டிய ப.சிதம்பரம்

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2018 09:24 am

p-chidambaram-praises-m-k-stalin-s-oath-taking-speech

தி.மு.க தலைவராக பதவியேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரைக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

50 ஆண்டுகாலம் தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 

பின்னர் தனது ஏற்புரையில், "கருணாநிதியின் உடன் பிறப்பே நீ இல்லாமல் என்னால் எதையும் செயல்படுத்த முடியாது. வா என்னோடு வா. இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்ட வா, முதுகெலும்பில்லாத இந்த அரசைத் தூக்கி எறிய வா.

நான் முன்னே செல்கிறேன். என்னுடன் சேர்ந்து வா பயணிப்போம். இனி அனைவரும் சமம். தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்" என்று பேசினார். 

இதுகுறித்து  முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில் ,"திமுக வின் புதிய தலைவர் திரு ஸ்டாலினின் முதல் தலைமை உரையை வரவேற்றுப் பாராட்டுகிறேன் 'பாஜகவிற்குப் பாடம் புகட்டுங்கள்' என்ற அவருடைய அறைகூவல் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் முதல் வரிசையில் தி.மு.கழகத்தை நிறுத்துகிறது" என்று பதிவிட்டு உள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close