வெறும் 13,000 கோடியை ஒழிக்கவா இவ்வளவு போராட்டம்- ப. சிதம்பரம் சாடல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Aug, 2018 04:15 am
p-chidambaram-tweet-about-demonetisation

வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

கறுப்புப் பணம் புழக்கத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. பணமதிப்பு நீக்கத்தின் போது செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் வங்கி முறைக்குத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், “உலகின் ஒரு பொருளாதார நிபுணர் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்லது என கூறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தினக்கூலிக்கு செல்லும் 15 கோடி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? மொத்த 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம் அல்லது தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்” என பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close