ரயில்வே உணவக டெண்டர் முறைகேடு வழக்கு: லாலுவின் மனைவி, மகனுக்கு ஜாமீன்!

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 12:27 pm
delhi-court-grants-bail-to-rabri-devi-tejashwi-yadav

ரயில்வே உணவக டெண்டர் முறைகேடு வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகனுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தற்போது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அதன்பின், அங்கிருந்து சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி லாலு மனுதாக்கல் செய்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் ஆகஸ்டு 30ம் தேதி, லாலு பிரசாத் உயர்நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ.உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் முன்னிலையில் லாலு பிரசாத் நேற்று சரணடைந்தார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், ரயில்வே உணவு டெண்டரில் ரூ.44.75 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கடந்த 24ம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைதாக்கல் செய்தது. இதில், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் வழக்கில் ஜாமீன் கோரிய மனுவில் ராப்ரி தேவி மற்றம் தேஜஸ்வி யாதவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close