கேரள சிறு வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 31 Aug, 2018 11:32 am
kerala-cm-pinarayi-vijayan-press-meet

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

வரலாறு காணாத மழையால் கேரளாவில் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மீண்டும் கேரளா பழைய நிலைமைக்கு திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்புகளில் இருந்து நிதியுதவியும் குவிந்து வருகிறது. 

நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், "வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை 483 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 305 நிவராண முகாம்களில் 59,296 பேர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து ஆய்வு செய்து பின்னர் முடிவெடுக்கப்படும். ஆகஸ்ட் 29ம் தேதி வரை நிவாரண நிதியாக 738 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது, "வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள்  தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் வட்டியின்றி ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும். சிறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 30ம் தேதி வரையில் நிவாரண நிதி ரூ.1,027 கோடியாக உயர்ந்துள்ளது. 4.17 லட்சம் பேர் நிதியுதவி வழங்கியுள்ளனர். குழந்தைகள், பொதுமக்கள் உள்பட நிதி வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close