கேரளாவுக்கு அடுத்த இடி: வேமாக பரவும் எலிக்காய்ச்சால்; 24 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 10:15 am
rat-fever-scare-in-kerala-toll-mounts-to-24

வரலாறு காணாத கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் கேரள மாநிலத்திற்கு அடுத்த இடியாக எலிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பருவமழை அதிகமான காரணத்தால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கோடிக்கான சொத்துக்கள் சேதம் அடைந்தன. தற்போது வரை கேரளாவில் நிவாரண பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

இந்நிலையில் மழை வெள்ளத்தின் காரணமாக அம்மாநிலத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.  இந்த காய்ச்சலால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close