வாராக்கடன்கள் எத்தனை?- பா.ஜ.கவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

  Newstm News Desk   | Last Modified : 02 Sep, 2018 05:51 pm

p-chidambaram-raises-question-about-loans-given-in-bjp-period

பா.ஜ.க ஆட்சியில் வழங்கப்பட்ட வாராக்கடன்கள் எத்தனை? என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 

சமீபத்தில் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் தான் முறையின்றி வங்கிகடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், "2014-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட வங்கிகடன்களில் வாராக்கடன்கள் எத்தனை?" என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

மேலும், பாராளுமன்றத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு மோடி பதலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.முந்தைய ஆட்சியில்தான் முறையற்ற வங்கிக்கடன்கள் அளிக்கப்பட்டதாக கூறும் மோடி, அவற்றை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close