நில மோசடி: ராபட் வத்ரா மீது எஃப்.ஐ.ஆர்

  Newstm Desk   | Last Modified : 02 Sep, 2018 08:02 pm
robert-vadra-and-fmr-haryana-cm-named-in-land-allegations-fir

குர்காவோன் பகுதியில் நில மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், ப்ரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபட் வத்ரா, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குர்காவோனின் நூ பகுதியை சேர்ந்த சுரீந்தர் ஷர்மா என்பவர் அளித்த புகாரின் பேரில், நில மோசடி செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.எல்.எஃப் மற்றும் ஓம்பிரகாஷ் பிராபர்ட்டிஸ் கட்டுமான நிறுவனங்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வத்ராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், குர்காவோனின் பல பகுதிகளில் 7.5 கோடி ரூபாய்க்கு நிலங்களை வாங்கி, அதை 55 கோடி ரூபாய்க்கு விற்றதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வத்ராவிடம் கேட்டபோது, "தேர்தல் வரப்போகிறது. பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருக்கிறது. அதனால் இவர்களுக்கு மக்கள் பிரச்னைகளில் இருந்து கவனத்தை சிதைக்க இதை செய்கிறார்கள். இதில் புதிதாக என்ன இருக்கிறது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close