அதிர்ஷ்டம் இல்லை... 7 மாத குழந்தையைக் கொன்ற தாய் இப்போது ஜெயலில்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Sep, 2018 11:59 pm
delhi-mom-blames-baby-girl-for-family-s-misfortunes-allegedly-kills-her

டெல்லியில் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டம் இல்லை எனக்கூறி 7 மாத பெண் குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிபா என்ற பெண்ணும், அவரது கணவரும் கடந்த மாதம் 20-ம் தேதி, குழந்தை நீரில் மூழ்கி விட்டதாக டெல்லியில் உள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் கழுத்தை யாரோ நெறித்து கொலை செய்துள்ளனர் என தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் அதிபாதான் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த விசாரணையில், இந்த குழந்தை பிறந்தது முதல், குடும்பத்தில் கடன் சுமை அதிகரித்தது. அதனால் அதிர்ஷமில்லாத குழந்தை என நினைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். பெற்றத்தாயே குழந்தையை கொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிபா கைது செய்யப்பட்டார். 

குழந்தை இருந்தவரை அந்த குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் இருந்ததோ இல்லையோ... இந்த கொலைக்குப் பிறகு குடும்பத்தின் அதிர்ஷ்டம் முற்றிலும் போய்விட்டது என்பதே உண்மை. இதன்விளைவு, கொலைகாரி அதிபா தற்போது சிறையில் இருக்கிறார். வழக்கு விசாரணை, தண்டை எல்லாம் முடிந்து வெளியே வரும்போது இதை நிச்சயம் உணர்வார் என்று நம்புவோம்!

- newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close