கிளம்பிய சில நொடிகளில் விழுந்து நொறுங்கியது மிக் 27 போர் விமானம்!

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 03:09 pm

mig-27-fighter-jet-crashes-outside-jodhpur

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 போர்விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

ஜோத்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வழக்கமான பாதுகாப்பு பயிற்சிக்காக மிக் 27 ரக விமானம் இன்று காலை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சில நிமிடங்களிலேயே, விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழும் முன்னரே, அதன் பைலட் பாராஷூட் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து விமானப்படை செய்தித்தொடர்பாளர் கர்னல் சம்பித் கோஷ் பேசியபோது, "மிக் 27 ரக போர் விமானம், ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து கிளம்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. பைலட் உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் விமானப்படை அதிகாரிகள், அந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close