ராணுவத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்வது வேஸ்ட்: ராணுவ தளபதி

  Newstm Desk   | Last Modified : 04 Sep, 2018 03:13 pm

army-soldiers-should-not-be-deprived-of-social-media-bipin-rawat

இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அது சாத்தியமில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியதால் சில சர்ச்சைகள் ஏற்பட்டு தேசிய அளவில் கவனிக்கப்பட்டன. இதன் காரணமாக, இந்திய ராணுவ வீரர்கள் இனி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று பேசினார். அவர், "ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க எங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த நம்மால் தடை விதிக்க முடியாது. எனவே, சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிப்பதில் எந்த பயனும் இல்லை.

ஆனால், அது ஒழுக்கமாக பயன்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் எங்கும் போக போவதில்லை. அதை வீரர்கள் பயன்படுத்துவார்கள். நம் எதிரிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி உளவியல் ரீதியாக தாக்க முயற்சி செய்வார்கள். அதை நாம் எதிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்" என கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close