• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

ஐதராபாத் அருங்காட்சியகத்தில் 2 கிலோ தங்க டிபன் பாக்ஸ் மாயம்: கொள்ளையர்கள் கைவரிசை

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2018 05:21 am

hyderabad-nizam-mir-osman-ali-khan-s-valuable-artefacts-stolen-from-nizam-museum

ஐதராபாத் அருங்காட்சியகத்தில் 2 கிலோ எடைக் கொண்ட தங்க டிபன் பாக்ஸ், கப்- சாசர் மற்றும் மாணிக்கம், வைரம், மரகதங்கள் பதித்த ஸ்பூன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார்  தெரிவித்துள்ளனர். 

ஐதராபாத் அருகே பழைமையான நகரமான புராணி ஹவேலியில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கதவுகளை உடைத்துக்கொண்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து விலைமதிப்பற்ற பொருட்களை திருடியதாகவும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயுள்ளதாகவும், காலையில் அருங்காத்சியகம் வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும் மிர் சவுக் காவல் நிலையத்தில் அருங்காட்சியக அதிகாரிகள் ஒரு புகார் அளித்தனர்.

அருங்காட்சியகத்தில் இருந்த தங்க கப், சாசர் மற்றும் மாணிக்கம், வைரம், மரகதங்கள் பதித்த சங்கிலியில் இணைத்த ஒரு ஸ்பூன் இரண்டு கிலோ கிராம் எடையுள்ள தங்க டிபன் பாக்ஸ் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

முதல் மாடியில் இருந்த வென்டிலேட்டரை மூடியிருந்த இரும்பு கம்பிகளை அகற்றி அதன் வழியாக நுழைந்து கொள்ளைச் சம்பவத்தை மர்ம நபர்கள் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சி.சி.டிவி கேமரா காட்சிகளையும்  போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். 

ஐதராபாத்தின் புராணி ஹவேலி அருங்காட்சியகத்தில் நிஜாம் ஆட்சிப் பகுதியிலிருந்த பல அரச குடும்பத்தின் தனிப்பட்ட உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்தியாவுடன் நிஜாம் அரசு இணைந்திருந்த காலத்தில் நிஜாம்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பல தனிப்பட்ட உடமைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் 1911 லிருந்து 1948 வரை ஆட்சியிலிருந்த 6வது மற்றும் கடைசி நிஜாம் அரசரான மிஸ் ஒஸ்மான் அலி கான் பெற்ற பரிசுப் பொருட்களாகும். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.