காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: மகனை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2018 08:34 am

bjp-mla-uma-devi-s-son-prince-lalchand-khatik-threatened-to-shoot-scindia

காங்கிரஸ் எம்.பிக்கு கொலை மிரட்டல் விடுத்த தனது மகனை போலீசில் ஒப்படைத்தார் பா.ஜ.உ எம்.எல்.ஏ உமா தேவி.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதித்ய சிந்தியா, தற்போது மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். காங்கிரஸ் எம்.பியான இவர் வரும் 5ம் தேதி தாமோ மாவட்டத்தின் ஹத்தா நகரில் நடக்கவிருக்கும் பேரணி ஒன்றில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் ஹத்தா தொகுதி பா.ஜ.க பெண் எம்.எல்.ஏவான உமாதேவி காதிக்கின் 19 வயது மகனான பிரின்ஸ்தீப் காதிக், ஹத்தா நகருக்கு வருகை தரும் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் “பந்தல்கந்த் ராணியின் மகளான ஜான்ஸியை கொலை செய்த ஜிவாஜிராவின் ரத்தம் உங்கள் நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, எனவே ஹத்தாவில் நுழைந்து அந்த நிலத்தை தீட்டுப்படுத்தினால் உங்களை சுட்டு வீழ்த்துவேன்” என்று ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனுராக் வர்தன் ஹசாரி போலீசில்  புகார் அளித்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட பிரின்ஸ்தீப் காதிக்கின் தாய் உமாதேவி, தனது மகனை போலீசில் ஒப்படைத்தார். அப்போது “இது சரியான நடத்தை அல்ல, என்னுடைய மகன் சிறைக்கு செல்ல வேண்டியவன், அதனால் தான் நானே அவனை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளேன். அவனது செயலுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பில்லை” என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close