ஓரினச்சேர்க்கை வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 09:13 am
supreme-court-to-pronounce-today-verdict-on-fate-of-section-377

ஓரினச்சேர்க்கை விவாகரத்தில் இந்திய சட்டப்பிரிவு 377யை நீக்கக்கோரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

சட்டப்பிரிவு 377 என்பது இயற்கை விதிமுறைகளுக்கு மாறாக உடலுறவு கொள்வது சட்டத்திற்கு எதிரானது என்பதை வரையறுக்கிறது. அதன்படி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வழிவகை செய்யலாம். இந்நிலையில் இதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. கடந்த ஜூலை 17ம் தேதி இந்த வழக்கு மீதான அனைத்து வாதங்களும் முடிவுற்ற நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்படுகிறது. சட்டப்பிரிவு 377யை நீக்க வேண்டும் என ஓரினசேர்க்கையாளர்கள் உள்பட பலரும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். 

கடந்த 2009ல், சட்ட பிரிவு 377 பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று கூறி, 18 வயதுக்கு மேல் இருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பாலியல் உறவில் ஈடுபடலாம் என தீர்ப்பளித்தது. ஆனால் இதற்கு எதிராக இந்து, முஸ்லீம் அமைப்புகள் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த வழக்கின் தீர்ப்பு  அனைத்து தரப்பினாலும் எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close