மோடியின் அரசு குறித்து கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமையில்லை: அமித் ஷா காட்டம்!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 12:10 pm
rahul-has-no-right-to-question-modi-government-bjp-president-amit-shah

மோடியின் அரசு குறித்து கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமையில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது. பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியின் 4 ஆண்டுக்கால ஆட்சி குறித்து கேள்வி கேட்க எந்தவிதமான உரிமையும் இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக ராகுலின் குடும்பத்தினர் தான் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான கிராமங்களுக்கு இன்று வரை  ஏன் மின்சாரம் கிடைக்கவில்லை? விவசாயிகளுக்கு ஏன் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை?  60 ஆண்டுகளாக என்ன விதமான ஆட்சியை நீங்கள் நடத்தினீர்கள் என்று மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்த கேள்விக்கு முதலில் ராகுல் காந்தி பதில் சொல்லட்டும்.

நான் காங்கிரஸ் கட்சியின் இளவரசரின் பேச்சைக் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்கிறார். இந்த கேள்வியை கேட்பதற்கு கூட ராகுலுக்கு உரிமையில்லை" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close