BREAKING: 72 ரூபாயை கடந்தது டாலரின் மதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 03:41 pm

rupee-falls-through-72-for-the-first-time

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று முதன்முறையாக 72 ரூபாயை கடந்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வரலாறு காணாத சரிவை தினம் சந்தித்து வரும் இந்திய ரூபாய், முதல்முறையாக 72 ரூபாயை கடந்துள்ளது. இன்று மதியம் 37 பைசா சரிந்த ரூபாயின் மதிப்பு, ரூ.72.12 என இறங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களால் ரூபாய் சரிந்து வருவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால், இந்திய ரூபாயின் மதிப்பு மேலோங்கி இருப்பதாக ஜெட்லி தெரிவித்துள்ளார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close