ஓரினச்சேர்க்கை குற்றமில்லை தீர்ப்பு: இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டாட்டம்

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Sep, 2018 05:33 pm
delhi-hotel-staff-break-into-dance-after-section-377-verdict

தன்பாலினச் சேர்க்கைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நட்சத்திர ஹோட்டல் பணியாளர்கள் குழு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். 

அரசியல் சாசனத்தின் 377-வது பிரிவு ஓரினச்சேர்க்கையைக் குற்றச்செயலாக வரையறுத்து, அதற்குச் சிறை தண்டனை வழங்கவும் வழி வகுத்துள்ளது. இந்த சட்டப்பிரிவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டிய சூழல் உள்ளது என்றும் நிறைய மிரட்டல்களைச் சந்திக்கவேண்டி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தன்பாலினச் சேர்க்கை என்பது தனிமனித சுதந்திரம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து  பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி லலித் ஹோட்டலில் இந்தத் தீர்ப்பை கொண்டாடும் வகையில் அங்கிருந்த ஊழியர்கள் குழு நடனமாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி வருகிறது. 

இதுகுறித்து லலித் ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் கேசவ் சூரி கூறும்போது, ‘’இந்த வழக்கில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பணியாளர்களுக்கு நன்றி. இந்த வழக்கால் எனக்கு ஒன்றும் கிடைத்துவிடப்போவதில்லை. ஆனாலும், தீர்ப்பை இந்த நேரத்தில் கொண்டாடவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார். https://twitter.com/twitter/statuses/1037597412838141952

 கேசவ் சூரி இந்த வழக்கில் ஒரு மனுதாரராகவும் இருந்ததாக ஆங்கில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close