377 சட்டப்பிரிவை நிராகரித்தது வரவேற்கத்தக்கது: ஐநா கருத்து

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:21 pm
united-nations-hails-historic-judgment

377 சட்டப்பிரிவை நிராகரித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. 

18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தன்பாலின உறவுக் கொள்வது தவறு இல்லை என்றும் அது 377 சட்டப்பிரிவினை எதிர்ப்பதுபோல் ஆகாது என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையும் இதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "மூன்றாம் பாலினர் என்று அவர்களை பிரித்து வைக்காமல், அவர்களுக்கு வருங்காலத்தில் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளும் அதிகாரப்பூர்வமாக வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளது. 

மேலும், "மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட சட்ட மசோதாக்கள் தான் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே ஒற்றுமையான, சமமான சமூகம் ஏற்படும்.  இந்த தீர்ப்பு, எல்.ஜி.பி.டி சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் வாழ்வில் ஒரு மயில்கல்லாக அமைந்துள்ளது" என்றும் கூறியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close