அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையுடன் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:37 pm

us-indian-foreign-and-defense-department-meet-in-delhi-deals-signed

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய - அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உச்சகட்ட சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பேயோ மற்றும், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் இந்தியா வந்ததை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமானம் நிலையத்தில் முறைப்படி வரவேற்றனர். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இரு தரப்புக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

இந்த சந்திப்பில், இந்திய பசிபிக் பகுதியில் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்திடப்பட்டன. இந்த சந்திப்பின் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பேயோவை சுஷ்மா ஸ்வராஜும், பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸை, அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாளை தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ பயிற்சி நடத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தியர்கள் குடியேறுவதை தடுக்க எச்-1பி விசா மீது பல்வேறு விதிக்கப்பட்ட பல தடைகளை தளர்த்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்களுடன் சேர்ந்து ஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் மைக் பாம்பேயோ, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close