பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து செப். 10ல் காங்கிரஸ் சார்பில் பந்த்

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2018 09:21 am

congress-calls-for-bharat-bandh-on-sept-10-over-fuel-price-hike

பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 10ம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது பெட்ரோல், டீசல் விலை. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், 'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.11 லட்சம் கோடி எரிபொருள் திருட்டு, கலால் வரி மற்றும் வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்  எனவும் இந்த போராட்டம் மூலம் வலியுறுத்தப்படும்.இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close