வீடு தேடி வரும் டெல்லி அரசின் சேவைகள்: இன்று தொடங்கி வைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 12:24 pm

doorstep-delivery-of-40-delhi-government-services-from-today

ஓட்டுநர் உரிமம், சாதிச் சான்றிதழ் உள்பட 40 வகை அரசு சேவைகள் வீட்டிற்கு வந்து நேரடியாக வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கி வைக்கிறார். 

செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆட்சி முறையில் ஒரு புரட்சியாகவும், ஊழலுக்கு வீழ்ச்சியாகவும் உலகிலேயே முதன்முறையாக வீடு தேடி வரும் சேவைகள் என்னும் மக்களுக்கு மிகவும் வசதியான திட்டம் தொடங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 

இதனையடுத்து இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த திட்டத்தின்கீழ் டெல்லி அரசுக்கு உட்பட்ட வருவாய்  துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து  துறை, குடிநீர் வாரியம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை தொடர்புடைய 40 சேவைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் விண்ணப்பித்து பொதுமக்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close