எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் உடல் சடலமாக மீட்பு!

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 12:24 pm
police-recover-body-of-hdfc-bank-vice-president-siddharth-sanghvi

காணாமல் போன எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 

எச்.டி.எஃப்.சி வங்கியின் துணைத் தலைவர் சித்தார்த் சங்வியை கடந்த செப்டம்பர் 5ம் தேதி காணவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் சித்தார்த்தை தீவிரமாக தேடி வந்தனர். முதலாவதாக அவரது காரை ட்ராக் செய்ததில், அவர் கார் இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரத்தக்கறை இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சர்ஃபராஸ் ஷாயிக் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில்,  சித்தார்த் சங்வியின் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரது உடல், கல்யாண் நெடுஞ்சாலை அருகே புதைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

மேலும், ஒரு பெண் உள்பட 3 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சித்தார்த் சங்வி கடந்த 2007ம் ஆண்டு வங்கியின் சீனியர் மேனேஜராக பொறுப்பேற்றார். தொடர்ந்து 2011ம் ஆண்டு துணைத்தலைவரின் உதவியாளராகவும், 2015ம் ஆண்டு உதவி துணைத்தலைவர், 2017ம் ஆண்டு துணைத்தலைவராகவும் பதவி உயர்வு அடைந்தார். காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close