மேகதாது அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: பிரதமரிடம் குமாரசாமி வலியுறுத்தல்!

  முத்துமாரி   | Last Modified : 10 Sep, 2018 04:39 pm

karnataka-cm-urged-centre-for-solving-mekedatu-dam

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். 

இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து அவர் பிரதமரிடம் பேசியுள்ளார். 

"மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகத் தீர்வு காண வேண்டும். தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்க வேண்டும். ரூ.1,912 கோடி செலவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார். 

மேலும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் குமாரசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close