உள்ளாட்சி தேர்தலில் நிற்க மாட்டோம்: மெஹபூபா முக்ஃதி

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 09:15 pm

not-going-to-contest-in-local-body-elections-pdp

காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி), நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் பி.டி.பி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி.

காஷ்மீரின் ஆளும் கட்சியாக இருந்த பி.டி.பி கட்சிக்கு பாரதிய ஜனதா கொடுத்து வந்த ஆதரவை கடந்த ஜூன் மாதம் வாபஸ் பெற்ற பின் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்டப்பிரிபு 35ஏ-வின் மீது சர்ச்சை நிலவி வரும் நிலையில், தேர்தல் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

"தேர்தல் நடத்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவை பின்வாங்குமாறு வலியுறுத்துகிறோம். மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக, மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்" என்றார் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close