திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் வெடிவிபத்து!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 06:08 am

blast-in-trinamool-congress-office

மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸின் கட்சி அலுவலகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேற்கு வங்கத்தின் பிர்பாம் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அலுவலக கட்டிடம் பாதி இடிந்து விழுந்தது. ஆனால், இந்த சம்பவத்தில் அங்கு இருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என மேற்கு வங்க போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டன. ஜார்கண்டில் இருந்து கூலிப்படையினரை அழைத்து வந்து வெடிகுண்டு வீசியதாக, திரிணமூல் காங்கிரஸின் அனுபிரதா மொண்டால் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மேற்கு வங்க பா.ஜ தலைவர் திலிப் கோஷ், திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் அடுக்கிவைக்கப்பட்ட கையெறி குண்டுகள் வெடித்ததில் இந்த சம்பவம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close