தெலங்கானாவில் அரசுப் பேருந்து விபத்து: 41 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 04:33 pm

telangana-bus-accident-30-dead

தெலங்கானாவில் அரசுப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானா மாநிலம் ஜாகித்யால் மாவட்டம் கொண்டாகாட்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 30 பேர் வரையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியானது. இதையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close