வாரணாசியில் 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 11:38 am
pm-modi-to-celebrate-his-68th-birthday-in-varanasi

வாரணாசியில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் இந்தியாவின் 14-வது பிரதமர் நரேந்திர மோடி. 

பிரதமர் மோடி, வருகிற செப்டம்பர் 17ம் தேதி தனது 68-வது பிறந்தநாளை வாரணாசியில் கொண்டாட இருப்பதாக, உத்தரப்பிரதேசத்தின் மாவட்ட அதிகாரி அறிவித்துள்ளார். பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த அட்டவணை பிரதமர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதற்கான வேலைகள் விரைந்து நடைபெற்று வருகிறது. 

பிறந்தநாளில் மோடி, காசி விஸ்வநாத் கோவிலுக்கு சென்று கடவுள் சிவனை தரிசிக்கிறார். அதன் பிறகு பள்ளி குழந்தைகளுடன் 'சலோ ஜீத்தே ஹேன்' படத்தை பார்க்கிறார். அவருடைய பிறந்தநாள் விழாவிற்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. 

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வாரணாசியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவிற்காக நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close