மல்லையாவை சந்திக்கவில்லை: ஜெட்லி மறுப்பு; எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

  Padmapriya   | Last Modified : 13 Sep, 2018 04:29 pm

arun-jaitley-colluded-with-vijay-mallya-should-resign-rahul-gandhi

இந்தியாவைவிட்டு செல்லும் முன் தன்னை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறிய தகவலை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறுத்துள்ளார்.  

மாறாக நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு நாள் ஓடி வந்த மல்லையா, கடன் தொகையை வங்கிகளிடம் செலுத்துவதாக தன்னிடம் கூறியதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அமைச்சர் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்ததால், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு ஒரு நாள் வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிக் கோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறுத்தினேன். எம்.பி. பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.

வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன், நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக குற்றம்சாட்டினார். 

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தொழிலதிபர் மல்லையா மற்றும் நிதியமைச்சர் ஜெட்லி இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து சென்ற போது ஒரு சில விநாடிகள் மட்டுமே மல்லையாவுடன் பேசியதாக ஜெட்லி கூறுவது உண்மையல்ல என்றும், இருவரது சந்திப்பையும் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அருண் ஜெட்லி பதவி விலக கோரி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சி தலைவர்கள் போர் கோடித் தூக்கியுள்ளனர். 

Newstm.in 

தொடர்புடையவைஇந்தியாவை விட்டு ஓடும் முன் ஜெட்லியை சந்தித்தேன்!- லண்டனில் மல்லையா பரபரப்பு தகவல்

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close