இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

  Newstm News Desk   | Last Modified : 14 Sep, 2018 12:07 pm

ex-isro-scientist-nambi-narayanan-awarded-rs-50-lakh-compensation

தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக நம்பி நாராயணன் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது. குற்றம் நிரூபிக்கப்படாததால் சிறையில் இருந்த நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். பொய் வழக்கில் நம்பி நாராயணனை கைது செய்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அவர் நிரபராதி என்று விசாரணையில் தெரியவந்ததால் அவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இழப்பீடு அதிகமாக கேட்டு விஞ்ஞானி  நம்பி நாராயணன் மேல்முறையீடு செய்திருந்தார்.  மேலும் தம்மை துன்புறுத்திய கேரள போலிசுக்கு தண்டனை வழங்கவும் கோரியிருந்தார். 

இந்நிலையில் அவருக்கு .50 லட்சம் இழப்பீடு வழங்கவும் தவறான வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close