மேகாலய முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 12:18 pm

after-4-decades-with-congress-ex-meghalaya-chief-minister-quits-party

உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.டி.லபாங் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேகாலயா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.டி.லபாங் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இந்நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில்,  "கட்சியில் மூத்த தலைவர்களின் அனுபவம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் எப்போதும் உபயோகப்படாது. மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் கட்சியில் இருப்பது மக்களுக்கான சேவை செய்ய தடையாக இருக்கிறது என்று கருதுகிறேன். அதுமட்டுமில்லாமல், தற்போதுள்ள எனது உடல்நிலையையும் நான் கருத்தில்கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது ராஜினாமாவை கட்சி தலைமை உடனடியாக ஏற்றுக்கொள்ள கோரிக்கை வைக்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

லபாங்-இன் ராஜினாமா கடிதத்தை பார்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவரது ராஜினாமா வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. 

லபாங் மேகாலயா மாநிலத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close