நம்பி நாராயணன் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வெட்கப்பட வேண்டும்: சு.சுவாமி

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 03:14 pm

shame-on-upa-subramanian-swamy-hails-sc-judgement-order-for-isro-scientist

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது குற்றம் சுமத்தியதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெட்கப்பட வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ராக்கெட் விஞ்ஞான ரகசியத்தை விற்பனை செய்ததாக கூறி கடந்த 1994ம் ஆண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவரை கேரள போலீசார் மிகவும் துன்புறுத்துவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கேரள குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வழக்கை விசாரித்த சிபிஐ, நம்பி நாராயணன் மீது கேரள போலீஸ் பொய் வழக்கு போட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. நம்பி நாராயணன் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தது. 

இதற்கிடையே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், முன்னாள் டிஜிபி உள்ளிட்ட கேரள போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிஐ அறிக்கையினை அடுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், தவறான வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். மிகவும் குறைவான பட்ஜெட்டில் ராக்கெட்டுகளை தயாரித்து, உலக நாடுகளின் பொறாமையால் மிகவும் பாதிக்கப்பட்டார். இதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெட்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

newstm.in

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close