கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் பதவி விலகுகிறாரா?

  Newstm Desk   | Last Modified : 15 Sep, 2018 09:53 am

manohar-parrikar-may-give-up-cm-ship-to-travel-to-delhi-for-treatment

கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் தான் பதவியில் இருந்து விலகுவதாக அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு கணைய புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு சுமார் மூன்று மாதம் வரையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இந்தியா திரும்பினார். தொடர்ந்து அவ்வப்போது அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று விட்டு கடந்த 6ம் தேதி கோவா திரும்பினார் மனோகர் பரிக்கர். இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால், பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவிடம் கூறியுள்ளார் பரிக்கர். அதற்கு அமித் ஷா, சிறிது காலம் பதவியில் தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார். 

தொடர்ந்து கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோகர் பரிக்கர் தற்போது சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். 

இதற்கிடையே, பரிக்கர் பதவி விலகுவதால், அம்மாநில பா.ஜ.க கூட்டணி கட்சியான மஹாராஷ்டிரவதி கோமந்தக் கட்சியின் மூத்த அமைச்சர் ராம்கிருஷ்ணா சுதீன் தவாலிகர் கோவா மாநில முதல்வராவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு பதிலளித்த அமித்ஷா, "இதுவரை அப்படி எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை. வரும் திங்கட்கிழமை ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close