போலி சிம் கார்டுகளை தவிர்க்க ஆதாரில் முகப்பதிவு செய்யும் முறை அறிமுகம்!

  முத்துமாரி   | Last Modified : 18 Sep, 2018 03:04 pm
uidai-aadhaar-card-face-recognition-feature-started-from-september-15

ஆதாரில் முகத்தை பதிவு செய்து அடையாளம் காணும் திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் பெயர், விலாசம், கைரேகை, விழிப்படல பதிவு ஆகிய விபரங்கள் உள்ளன என நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த விபரங்களுடன் முகப்பதிவும் சேர்க்கப்படுகிறது.

நாம் வங்கிகளில் கணக்கு தொடங்க, சிம் கார்ட் வாங்க என தற்போது அனைத்திற்கும் ஆதார் தான் உபயோகித்து வருகிறோம். இதில் சிம் கார்டு வாங்கும் போது ஆதார் விபரங்கள் தவறாக உபயோகிக்கப்படுகிறது. போலி சிம் கார்டுகள் உருவாக்கப்படுகின்றன என தகவல் வெளியானதை அடுத்து, இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இனி வரும் காலங்களில் ஆதார் விபரங்களில் முகப்பதிவும் சேர்க்கப்படும். சிம் கார்டு வாங்குதல், வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவற்றிற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் முகப்பதிவை எடுத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என இந்திய தனிநபர் அடையாள ஆணையம்(யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. 

செப்டம்பர் 15ம் தேதி இந்த புதிய வசதி தொடங்கி வைக்கப்படும் என யுஐடிஏஐ கூறிய நிலையில், ஆதாரில் முகப்பதிவு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆணையம் எடுத்து வருகிறது. இதன் மூலம் ஆதார் அதிகம் பாதுகாப்பானதாக இருக்கும். போலி சிம் கார்டுகள் உபயோகிக்கப்படுவது குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close