கன்னியாஸ்திரி விவகாரம்: பிஷப் பிராங்கோ சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜர்!

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 04:04 pm
kerala-nun-rape-case-bishop-franco-mulakkal-appears-before-probe-team

கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ முலக்கல், கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிராங்கோ முலக்கல் என்ற பிஷப் மீது குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். பிஷப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல சமூக அமைப்புகளும், கேரளாவில் உள்ள கன்னியாஸ்திரிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

காவல்துறை நடவடிக்கை எடுக்காததையடுத்து, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி போப்பாண்டவருக்கு கடிதம் எழுதினார் . பின்னர் பிஷப் முலக்கல் நேரில் ஆஜராகும் படி கேரள போலீசார் சம்மன் அனுப்பினர். தொடர்ந்து பிஷப்  பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக  பிஷப் பிராங்கோ அறிவித்தார். 

இதன் தொடர்ச்சியாக கொச்சியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பிஷப் பிராங்கோவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. கேரள வைக்கம் துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பிஷப்பிடம் விசாரணை நடத்தி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close