சர்வாதிகாரம் தொழிலாக மாறிவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 04:59 pm
after-bilaspur-lathi-charge-rahul-gandhi-says-dictatorship-a-profession-under-modi

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரம் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் ஊழலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அமல் அகர்வாலுக்கு எதிராகவும், மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர்.  இதையடுத்து, அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். அவர்களை ஓட ஓட விரட்டி லத்தி சார்ஜ் நடத்தினர்.  மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.அதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.  

போராட்டக்காரர்கள் அமைச்சரின் வீட்டினுள் குப்பைகளை தூக்கி எறிந்ததால் தான் அவர்களை கைது செய்தோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   

போலீசார் லத்தி சார்ஜ் நடத்திய அந்த காட்சி முழுவதும் அங்கேயிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதுடன், தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியது. 

இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது தொடர்பாக கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது. சர்வாதிகாரமே ஒரு தொழிலாக மாறிவிட்டது" என கூறி, காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்ட அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close