ஆதார் எதற்கெல்லாம் தேவை? - உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய விவரங்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 02:27 pm
sc-verdict-on-aadhaar-case-highlights

வங்கிக்கணக்கு, வருமானவரி கணக்கு, செல்போன் இணைப்பு, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. 

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சார்பாக நீதிபதி ஏகே சிக்ரி தீர்ப்பை வாசித்தார்.

தீர்ப்பின் முக்கிய விபரங்கள்: 

► சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் ஒரு அடையாளத்தை அளிக்கிறது. 

► ஆதாரை போலியாக தயாரிக்க முடியாது. எனவே, இது மற்ற அடையாள அட்டைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

► ஆதார் மற்ற அடையாள அட்டை போல அல்லாமல் ஒருவருக்கு  கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

► கையெழுத்திலிருந்து கைரேகை வைக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. கையெழுத்தைக் கூட மாற்றலாம். ஆனால் கைரேகையை மாற்ற முடியாது. எனவே அரசின் மானியங்கள் சம்மந்தப்பட்ட நபருக்கே சென்றடையும்.

► கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது.

► மேலும், 99% மக்கள் ஆதாரை பெற்றுள்ளதால் இனிமேல் அதனை தடை செய்வது என்பது சரியாக இருக்காது. 

► அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாகவே ஆதார் இருக்கிறது. ஆனால் அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். 

► ஆதார் விபரங்களை தனியார் நிறுவனங்கள் கேட்க முடியாது. அவ்வாறு கேட்டால் அது சட்ட விரோதமாக கருதப்படும். தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதாரை பயன்படுத்த வேண்டும். 

► அரசு நலத்திட்டங்களில் ஆதாரை அவசியமாக்குவதன் மூலம் போலிகளை களைய உதவும்.

► ஆதார் சிறந்தது  என்பதை விட தனித்துவமாக இருக்க வேண்டும். 

► தனிநபர் விபரங்கள் வெளியே கசிய கூடாது; தனிநபர் கண்ணியம் காக்கப்பட வேண்டும். 

► ஆதார் தகவல்களை பாதுகாப்பது என்பது அரசின் முக்கிய கடமை. 

► அதே நேரத்தில் ஆதார் இல்லை என்பதற்காக பொது மக்களின் உரிமைகள் மறுக்கப்பட கூடாது.

► கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால், அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளுக்கும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது.

► செல்போன் இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதார் இல்லையென்றாலும் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க வங்கிகள் அனுமதிக்க வேண்டும். 

► ஆனால் வருமான வரி கணக்கு, பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close