நீதிமன்ற வழக்கின் விசாரணைகளை நேரலை செய்யலாம்: உச்ச நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 01:11 pm
supreme-court-allows-live-streaming-of-court-proceedings

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் விசாரணைகளை நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதி விசாரணையில் மக்களுக்கு நம்பகத்தன்மையை கொண்டுவரும் பொருட்டு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் விசாரணைகளை நேரலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கின் விசாரணைகளை நேரலை செய்யலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் நேரலை செய்யப்படும்.  தலைமை நீதிபதி அமர்வு முன்பாக நடைபெறும் வழக்குகள் சில, நீதிபதி சட்ட ஆணைய மசோதா, ஆதார் போன்ற வழக்குகள் நேரலை செய்யப்படும். இதன்மூலம் நீதித்துறையில் ஒரு நம்பகத்தன்மையை வழங்கமுடியும். 

முதற்கட்டமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் சில வழக்குகள் நேரலை செய்யப்படும். தொடர்ந்து மற்ற நீதிமன்றங்களிலும் இது அமல்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close