ஹிமாச்சல்: பனியில் சிக்கிய 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்பு

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 07:13 pm
50-iit-students-rescued-from-himachal

இமாச்சல் மாநிலத்தின் லஹவுல், ஸ்பிதி பகுதியில் மலையேற சென்று, கடும் மழை மற்றும் பனிபொழிவில் சிக்கிக் கொண்ட 50  ஐஐடி மாணவர்களை இந்திய விமானப்படை பத்திரமாக மீட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலங்கள் கடந்த சில நாட்களாக கடும் மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாநிலங்களையும் சேர்த்து பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் ட்ரெக்கிங் சென்றிருந்த போது, பனியில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களை அனுப்பி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு 50 மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க, விமானப்படை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close