தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  முத்துமாரி   | Last Modified : 27 Sep, 2018 11:26 am
adultery-no-longer-a-criminal-offence-law-unconstitutional-rules-sc

தற்கொலைக்கு தூண்டப்படாத வரை, தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தகாத உறவு விவகாரத்தில் ஆணுடன் சேர்த்து சம்மந்தப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை வழங்க கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, சம்மந்தப்பட்ட நபர்களோ, அல்லது அவர்களது கணவன்/மனைவி தற்கொலைக்கு  தூண்டப்படாத வரை, தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறுகையில், "ஆணும், பெண்ணும் சம உரிமை என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 வருட சிறைத்தண்டனை என்பது சரியல்ல. எனவே பிரிவு 497 அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்படுகிறது. கணவன் -மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவும் காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் தகாத உறவு இருந்தால் அது கிரிமினல் குற்றம். அதன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளது.

முன்னதாக, பிரிவு 497ன்படி, மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவு வைத்திருந்தால், அந்த ஆணுக்கு 5 வருட சிறைத்தண்டனையும், அதேபோன்று கணவன் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தால் மனைவியின் புகாரின் பேரில் கணவனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் இருந்தது. அதே நேரத்தில் மற்றொருவருடன் உறவுகொள்ள அந்த கணவன்/மனைவி அனுமதிக்கும்பட்சத்தில் குற்றமாக எடுத்துக்கொள்ளப்படாது என இருந்தது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close