மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்திராணி முகர்ஜி!

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 07:04 pm
indrani-mukerjea-admitted-to-jj-hospital

ஐஎன்எக்ஸ் மீடியாவின் முன்னாள் தலைவரும், ஷீனா போரா வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவருமான இந்திராணி முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக மும்பை ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2016ல் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்,  மும்பையில் உள்ள பைக்குலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முதுகுத்தண்டு வடம் வழியாக மூளை பகுதிக்கு ரத்தம் பாய்ச்சும் நரம்புகளில் அடைப்பு ஆகியவற்றுக்காக சிகிச்சை அளிப்பதற்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சிறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனையடுத்து இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close